/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திக்குத் தெரியாமல் கால்நடைகள் உலா; அடிக்கடி நடக்கும் விபத்தால் நொறுங்குது விலா
/
திக்குத் தெரியாமல் கால்நடைகள் உலா; அடிக்கடி நடக்கும் விபத்தால் நொறுங்குது விலா
திக்குத் தெரியாமல் கால்நடைகள் உலா; அடிக்கடி நடக்கும் விபத்தால் நொறுங்குது விலா
திக்குத் தெரியாமல் கால்நடைகள் உலா; அடிக்கடி நடக்கும் விபத்தால் நொறுங்குது விலா
ADDED : டிச 09, 2024 11:29 PM

பயமா இருக்கு
மாநகராட்சி வார்டு எண் 15, ஜி.என்.மில்ஸ், ஸ்ரீ சூர்யலெட்சுமி கார்டன் பகுதியில் உள்ள தெருவிளக்கு (எஸ்.பி 4 கம்பம் 5) கடந்த 10 நாட்களாக எரிவதில்லை. சமூக விரோத செயல்கள் நடக்காமல் தடுக்க, இப்பிரச்னை சரி செய்யப்பட வேண்டும். -
--சங்கர் சுப்ரமணியன், ஜி.என்.மில்ஸ்.
வீட்டுக்குள் கழிவுநீர்
கோவை மாநகராட்சி வார்டு 56, ஹோப்ஸ், டி.ஜெயவர்த்தன் நகரில், மழைநீர் வாய்க்காலை அடைத்து, அதன் மேல் தனியார் காலியிடத்துக்கு வாகனங்கள் சென்று நிறுத்த, பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மழையின் போது வாய்க்காலில் நீர் தேங்கி, அருகில் உள்ள வீடுகளுக்குள் நுழைகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். -
-ராமசாமி, டி.ஜே.நகர்.
இடிஞ்சு வருஷமாச்சு
வார்டு எண் 74, சாஸ்திரி வீதி எண் 2, பாப்பநாயக்கன் புதூர் பகுதியில் சாக்கடை சுவர் இடிந்து, ஒரு வருடமாகிறது. பல முறை முறையிட்டும் சரி செய்யவில்லை. வாகனப் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது. உடனடியாக சாக்கடை சுவர் கட்ட வேண்டும்.
--குணசேகரன், சாஸ்திரி வீதி.
கால்நடைகள் உலா
பீளமேடுபுதுார், திருமகள் நகரில், தினமும் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. குடியிருப்புகள் அதிகம் உள்ள இப்பகுதியில், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -
-சவுந்தரராஜ், திருமகள் நகர்.
பயன்பாட்டுக்கு வரல
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண் 24ல் உள்ள டைடல் பார்க் பகுதியில், நடமாடும் கழிப்பறை வைக்கப்பட்டுள்ளது. ஒரு வருடம் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.-
-பாலு, தண்ணீர்பந்தல்.
நோய் பரவும் அபாயம்
சூலுார் மகளிர் உயர்நிலைப்பள்ளி எதிரில் உள்ள சாக்கடை கால்வாய், குப்பை கழிவுகளால் நிரம்பியுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாக்கடை கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும். -
-ராஜேஷ், சூலுார்.
அடிக்கடி விபத்து
சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்., ரோடு பி.என்.டி., குடியிருப்பு எதிரே, 43வது வார்டு, ஆர்.பி.எம்., என்கிளேவ் சாலை, மிகவும் பழுதடைந்து மோசமாக உள்ளது. சாலையில் உள்ள குழிகளில், இரு சக்கர வாகனங்கள் சிக்கி விபத்துகள் நடக்கின்றன. மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலையை சீரமைக்க வேண்டும். -
-ஜெயலக்ஷ்மி, சாய்பாபா காலனி.