தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நடைபாதையில் கால்நடைகள் உலா ; மக்கள் நடந்து செல்ல சிரமம்

 நடைபாதையில் கால்நடைகள் உலா ; மக்கள் நடந்து செல்ல சிரமம்

 நடைபாதையில் கால்நடைகள் உலா ; மக்கள் நடந்து செல்ல சிரமம்


ADDED : மார் 03, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 05:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடைபாதையில் கால்நடைகள் வால்பாறை நகர் பகுதியில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், கால்நடைகள் படுத்து ஓய்வெடுப்பதால், மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- சரண்: மின்விளக்கு எரியுமா? கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் அடிக்கடி ஏரியாமல் இருப்பதால் பொதுமக்கள் பலர் இருட்டில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர் இதை கவனித்து சரி செய்ய வேண்டும்.

--- கண்ணன்: கிழிந்த சீட் கவர் பொள்ளாச்சி --- கோவை அரசு பஸ்சில் பயணியர் அமரும் இருக்கையில் சீட் கவர்கள் கிழிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் பயணியர் பஸ்சில் பயணிக்கும் போது அசவுகரியம் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்சில் ஆய்வு செய்து சீட் கவர் மாற்றம் செய்ய வேண்டும்.

-- மூர்த்தி: கழிவுகள் தேக்கம் உடுமலை - பழநி ரோடு கழுத்தறுத்தான் பள்ளத்தில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அது முறையாக துார்வாரப்படாததால், குப்பை, கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, கால்வாயை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சாமிநாதன்: அறிவிப்பு பலகை வைக்கணும் கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில், அரசு டவுன் பஸ் வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை இல்லாததால், பயணிகள் பலர் நேரம் தெரியாமல் அருகில் உள்ள கடைகளில் தகவல் கேட்கும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து பஸ் வரும் நேரம் குறித்த அறிவிப்பை வைக்க வேண்டும்.

- - கந்தசாமி: சுகாதாரம் பாதிப்பு பெதப்பம்பட்டி உப்பாறு பாலத்தின் மீது திறந்த வெளியில் கழிவுகள் வீசப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுகளை வீசுவோர் மீது சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சக்தி: விதிமீறல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டில், விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், பிற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, விதிமீறும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கார்த்திக்: புதர் நிறைந்த ஓடை உடுமலை நெடுஞ்செழியன் நகர் பகுதியில் மழைநீர் ஓடை புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, ஓடையை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜா: குப்பைக்கு தீ வைப்பு உடுமலை எஸ்.வி.புரம் பாசன கால்வாய் ஓட்டி குப்பைக்கு தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அங்கு குப்பைக்கு தீ வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கருப்பையா: குறியீடு வேண்டும் உடுமலை 100 அடி திட்டச்சாலையில் உள்ள வேகத்தடையில் குறியீடு இல்லை. இதனால், வாகன ஓட்டுனர்கள் அச்சாலையில் செல்லும் போது குழப்பமடைந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, வேகத்தடைக்கு குறியீடு அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகன்: புதர் மண்டிய கால்வாய் பொள்ளாச்சி குள்ளக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே, சாக்கடை கால்வாய் ஓரத்தில் அதிக அளவில் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் செல்ல முடியாத படி, தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று அபாயம் உள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து விரைவில் சரி செய்ய வேண்டும்.

-- வீரமணி:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us