/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காவிரி கூக்குரல் இயக்கம்; மரக்கன்றுகள் நடும் விழா
/
காவிரி கூக்குரல் இயக்கம்; மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : செப் 07, 2025 09:23 PM

பெ.நா.பாளையம்; சத்குரு பிறந்தநாளில் காவேரி கூக்குரல் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சத்குருவின் பிறந்த நாள்,'நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினம்' என, ஈஷா தன்னார்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக விவசாய நிலங்களில் நேற்று, 64 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள, 61 விவசாய நிலங்களில், 235 ஏக்கர் பரப்பளவில், 64,180 டிம்பர் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
ஈஷா யோகா மையம் மற்றும் பேரூர் ஆதீனம் இணைந்து, 'ஒரு கிராமம் - ஒரு அரசமரம்' திட்டத்தின் வாயிலாக, 24 கிராமங்களில், 120 அரச மர கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
அக்ரஹார சாமக்குளம் ஏரி படிநிலைகளில், 100 அரச மரக்கன்றுகள், அவ்வூர் பொதுமக்கள் கையால் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில், அக்ரஹார சாமக்குளம் ஏரி மீட்புக் குழுவை சேர்ந்த ரங்கநாதன், துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள், ஈஷா நாற்றுப் பண்ணைகளில் தேவையான அளவு இருப்பில் உள்ளன.
காவிரி கூக்குரல் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
காவிரி கூக்குரல் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.