சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு 34 மையங்களில் துவங்கியது
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு 34 மையங்களில் துவங்கியது
ADDED : பிப் 18, 2026 06:44 AM

அ நிறம் | அளவு
கோவை: நடப்பு கல்வியாண்டுக்கான சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்று துவங்கின. ஏப்.,10 வரை தொடர்ந்து நடைபெறும்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 24 தேர்வு மையங்கள் இருந்தன. தேர்வு மையங்கள் இல்லாத பள்ளிகள், மாணவர்களை முன்னதாகவே பஸ்ஸில் தேர்வுக்கு அழைத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த ஆண்டு கூடுதலாக, 10 தேர்வு மையங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வை எழுதினர்.
தேர்வு துவங்குவதற்கு முன் மாணவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் பின்பே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கூடத்தில் தடையில்லா மின்சாரம், குடிநீர், மின்விசிறி வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
