தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சி.டி.சி.ஏ. கிரிக்கெட் 7 விக்கெட் வீழ்த்திய வீரர்

சி.டி.சி.ஏ. கிரிக்கெட் 7 விக்கெட் வீழ்த்திய வீரர்

சி.டி.சி.ஏ. கிரிக்கெட் 7 விக்கெட் வீழ்த்திய வீரர்


ADDED : செப் 15, 2025 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2025 09:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில், ஐந்தாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., - ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது.

சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், டெவில் ஸ்ட்ரோக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.

சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 302 ரன் எடுத்தனர். வீரர்கள் ஜெருஷ், 79 ரன், ஹர்ஜித், 69, பிரணவ் ஆதித்யா, 50, கார்வேந்தன், 38, பி.ரஞ்சித்குமார், 36 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் என்.ரஞ்சித்குமார் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய டெவில் ஸ்ட்ரோக்கர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 27 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 144 ரன் மட்டுமே எடுத்தனர்.

எதிரணி வீரர் சர்வஜித் ராகவ் ஏழு விக்கெட் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us