/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் 122 ரன் விளாசிய வீரர்
/
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் 122 ரன் விளாசிய வீரர்
ADDED : டிச 25, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி. சி.ஏ.,) சார்பில் நான்காவது டிவிஷன் போட்டி, எஸ்.ஆர்.சி.ஏ.எஸ்., டர்ப் உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. சாம் கிரிக்கெட் அகாடமி அணியும், சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியும் மோதின. பேட்டிங் செய்த சாம் கிரிக்கெட் அகாடமி அணியினர், 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 265 ரன் எடுத்தனர்.
வீரர் சுரேஷ், 122 ரன், நிசாந்த், 66 ரன் எடுத்தார். எதிரணி வீரர் சரவணகுமார், சஞ்சித் ரானா ஆகியோர் தலா நான்கு விக்கெட் வீழ்த்தினர். சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணியினர், 42.4 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு, 171 ரன் எடுத்தனர். வீரர் மோகன், 72 ரன் எடுத்தார்.

