/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்பட்ட பரிதாபம்
/
சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்பட்ட பரிதாபம்
சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்பட்ட பரிதாபம்
சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்பட்ட பரிதாபம்
ADDED : டிச 25, 2025 05:12 AM

கோவை: நர்சுகள் போராட்டம் நேற்று தற்காலிகமாக முடிவுக்கு வந்த நிலையில், கடந்த ஆறு நாள் ஸ்டிரைக் காரணமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசர பிரசவங்கள், இறுதி சமயத்தில் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், போராட்டம் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளை சமாளிக்க நர்சுகள் இல்லாமல் திணறினர். பிரசவம் போன்ற அவசர சமயங்களில், கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இம்மையங்களில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 வரை புற நோயாளிகள் வருகின்றனர். தவிர, ஆன்லைன் பதிவுகள், புற்றுநோய் ஸகிரீனிங், போன்ற கடுமையான பணிச் சுமைக்கு மத்தியில் நோயாளிகளை எதிர்கொள்ள முடியாமல், பணியில் உள்ள செவிலியர் தவித்தனர்.
உதாரணமாக, சி.டி.எம்., நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், 3 செவிலியர்களில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இரவு, பகல் தொடர்ந்து பணியை பார்க்க முடியாமல் அருகில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் உள்ள, செவிலியரை வரவழைத்தனர்.
சாய்பாபாகாலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில், நான்கு பேரில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். கிராமப்புறங்களில் ஆட்கள் யாரும் இன்றி, சில சுகாதார நிலையங்களில் நோயாளிகள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. நர்சுகள் இன்றி நோயாளிகள் அனுபவித்த அவதி, தமிழக அரசின் பார்வைக்கு சென்றதையடுத்து, நேற்று ஆயிரம் நர்சுகளை நிரந்தரம் செய்வதாக அறிவிப்பு வெளியானது. தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத் தின் மாவட்ட செயலாளர் பியூலா அறிவித்துள்ளார்.
போராட்ட களத்தில்
பாலுாட்டிய
தாய்மார்
நேற்று கோவை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர், குழந்தைகளை பார்த்துக்கொள்ள ஆளில் லாமல், அவர்களையும் போராட்ட களத்திற்கு துாக்கி வந் தனர். நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தொடர்ந்து அமர முடியாமல், அருகில் உள்ள இடத்தில், படுத்து ஓய்வு எடுத்தார். பாலுாட்டும் தாய்மார்கள் சிலர், தங்கள் பச்சிளங்குழந்தைகளை போராட்ட களத்தில் பாலுாட்டி பின், உறங்க வைத்தனர்.

