/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ. கிரிக்கெட் போட்டி: இ.ஏ.பி. அணி அபார வெற்றி
/
சி.டி.சி.ஏ. கிரிக்கெட் போட்டி: இ.ஏ.பி. அணி அபார வெற்றி
சி.டி.சி.ஏ. கிரிக்கெட் போட்டி: இ.ஏ.பி. அணி அபார வெற்றி
சி.டி.சி.ஏ. கிரிக்கெட் போட்டி: இ.ஏ.பி. அணி அபார வெற்றி
ADDED : நவ 04, 2025 09:10 PM
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், ஒன்றாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், இ.ஏ.பி., கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின.
பேட்டிங் செய்த, ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 199 ரன் எடுத்தனர். வீரர்கள் நவீன், 48, கவுசிக், 47 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர்கள் மது மற்றும் மிதுன் ஆகியோர், தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களம் இறங்கிய, இ.ஏ.பி., அணியினர், 37.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 202 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர்கள் முகமது ஆசிக், 53, மோகன் பிரசாத், 38, ராஜ கணபதி, 37 ரன் எடுத்தனர்.