/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஹிந்துஸ்தான் டிராபி' ஹாக்கி: பள்ளி மாணவர்கள் சுறுசுறுப்பு
/
'ஹிந்துஸ்தான் டிராபி' ஹாக்கி: பள்ளி மாணவர்கள் சுறுசுறுப்பு
'ஹிந்துஸ்தான் டிராபி' ஹாக்கி: பள்ளி மாணவர்கள் சுறுசுறுப்பு
'ஹிந்துஸ்தான் டிராபி' ஹாக்கி: பள்ளி மாணவர்கள் சுறுசுறுப்பு
ADDED : நவ 04, 2025 09:10 PM
கோவை: கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான, 'ஹிந்துஸ்தான் டிராபி-2025' ஹாக்கி போட்டி, மலுமிச்சம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், நேற்று முன்தினம் துவங்கியது; வரும், 7ம் தேதி நிறைவடைகிறது.
இதில், 14, 16, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும், 10க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடுகின்றன. 15-5-15 என்ற கால அவகாசம் அடிப்படையில், போட்டிகள் நடந்து வருகின்றன.
மாணவர்களுக்கான போட்டியில் (16 வயதுக்குட்பட்ட) சி.பி.எம்., எஸ்.வி., பெண்கள் பள்ளியும், ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ., அணியும் மோதின. இதில், 3-0 என்ற கோல்களில் ஸ்டேன்ஸ் அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து, சச்சிதானந்தா பள்ளி அணி, 6-1 என்ற கோல்களில், எஸ்.ஆர்.வி.எம்., பள்ளி அணியை வென்றது. தொடர்ந்து நடந்த அரையிறுதியில், சச்சிதானந்தா பள்ளி அணி, 6-0 என்ற கோல்களில் ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ., பள்ளி அணியை வென்றது.
19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், கே.வி.எம்., பள்ளி அணி, 2-0 என்ற கோல்களில், ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் பள்ளி அணியையும், சச்சிதானந்தா பள்ளி அணி, 9-1 என்ற கோல்களில், ஈஷா பள்ளி அணியையும் வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

