/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ., டிவிஷன் கிரிக்கெட் போட்டி; சதம், ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்கள்

ADDED : ஜூன் 12, 2025 10:25 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடந்துவருகிறது. இதில், யங் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், கோவை காம்ரேட்ஸ் அணியும் மோதின.
பேட்டிங் செய்த யங் பிரண்ட்ஸ் அணியினர், 45.2 ஓவரில், 75 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர் ரோகித் ராம் நான்கு விக்கெட்களும், கோகுல கிருஷ்ணா மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர். கோவை காம்ரேட்ஸ் அணியினர், 20.1 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 76 ரன்கள் எடுத்தனர். வீரர் ஜான் பப்டிஸ்ட், 38 ரன்கள் எடுத்தார்.
நான்காவது டிவிஷன் போட்டியில், சூர்யபாலா கிரிக்கெட் அகாடமி அணியும், காஸ்மோ விலேஜ் ஆர்.பி.இ.எஸ்.ஏ., அணியும் மோதின. பேட்டிங் செய்த சூர்யபாலா அணியினர், 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 249 ரன்கள் குவித்தனர்.
வீரர்கள் சரண், 107 ரன்களும், தினேஷ்குமார், 33 ரன்களும் விளாசினர். காஸ்மோ அணியினர், 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 196 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் ஹரிகிருஷ்ணன், 51 ரன்கள், அருண் பிரான்கிளின், 39 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர் தினேஷ்குமார் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தினார்.