/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி
/
சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி
சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி
சி.டி.சி.ஏ., டிவிஷன் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி
ADDED : நவ 11, 2025 12:52 AM
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், முதலாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. இ.ஏ.பி., கிரிக்கெட் அகாடமி அணியும், ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின.
இ.ஏ.பி., அணியினர், 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 235 ரன் எடுத்தனர். வீரர்கள் ராகுல், 59, முகமது ஆசிக், 57, ராஜ கணபதி, 49 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் பாலசுப்ரமணியம் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணியினர், 46 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 179 ரன் எடுத்தனர். வீரர்கள் சந்தோஷ், 39, பாலசுப்ரமணியம், 34, சச்சின், 31, பாலதரன், 30 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் மோகன் பிரசாத் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.