சி.டி.எப்.ஏ., 'ஏ' டிவிஷன் போட்டி பி.பி.டி.எஸ்., எஸ்.சி., முன்னிலை
சி.டி.எப்.ஏ., 'ஏ' டிவிஷன் போட்டி பி.பி.டி.எஸ்., எஸ்.சி., முன்னிலை
ADDED : மார் 16, 2026 05:06 AM
கோவை: கோவை மாவட்ட கால்பந்து சங்கம்(சி.டி.எப்.ஏ.,) சார்பில் 'ஏ' டிவிஷன் போட்டிகள் ரத்தினம் கல்லுாரி, நேரு ஸ்டேடியம் உள்ளிட்ட மைதானங்களில் ஒரு மாதத்துக்கும் மேல் நடந்து வருகின்றன. 12 அணிகள் 'லீக்' முறையில் விளையாடுகின்றன.
நேற்று முன்தினம் வரை, 11 போட்டிகள் நடந்துள்ளன. பி.பி.டி.எஸ்., எஸ்.சி., அணி 10 போட்டியில் 8 வெற்றி, இரண்டு டிரா என, 26 புள்ளியுடன் முதலிடத்திலும், பி.எஸ்.ஜி., எஸ்.சி., அணி 10 போட்டியில் 8 வெற்றி, ஒரு டிரா என 25 புள்ளியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
ரத்தினம் எப்.சி., அணி எட்டு வெற்றியுடன் 24 புள்ளி, காருண்யா எப்.சி., ஆறு வெற்றி, ஒரு டிராவுடன் 19 புள்ளி, எம்.ஆர்.சி., அணி நான்கு வெற்றி, இரண்டு டிராவுடன் 14 புள்ளி, இ.பி.ஆர்.சி., அணி நான்கு வெற்றி, இரண்டு டிராவுடன் 14 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
எஸ்.என்.ஜி.சி., அணி, 4 வெற்றி, ஒரு டிராவுடன் 13 புள்ளிகள், ஏ.பி.கே.எம்.எப்.சி., அணி மூன்று வெற்றி, ஒரு டிராவுடன் 13 புள்ளி, டிரெண்டி எப்.சி., அணி 3 வெற்றி, இரண்டு டிரா என 11 புள்ளியுடனும் உள்ளன.
அத்யாயனா எப்.சி., அணி இரண்டு வெற்றி, ஒரு டிராவுடன் ஏழு புள்ளி, சிவகன்யா எப்.சி., அணி ஒரு வெற்றி என மூன்று புள்ளி, நேரு எப்.சி., அணி ஒரு டிரா என ஒரு புள்ளியிடனும் உள்ளன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
