sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'செல்போன் வெளிச்ச படிப்பு எதிர்காலத்தை இருட்டாக்கும்'

/

 'செல்போன் வெளிச்ச படிப்பு எதிர்காலத்தை இருட்டாக்கும்'

 'செல்போன் வெளிச்ச படிப்பு எதிர்காலத்தை இருட்டாக்கும்'

 'செல்போன் வெளிச்ச படிப்பு எதிர்காலத்தை இருட்டாக்கும்'


ADDED : ஜன 08, 2026 05:10 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்தும், 40வது புத்தக கண்காட்சி, பெரியகடை வீதியில் உள்ள நுாலக ஆணைக்குழு கட்டட வளாகத்தில் நடக்கிறது. அனைத்து தரப்பினருக்குமான, புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.

கண்காட்சி துவக்க விழாவில், பாரதியார் பல்கலை தமிழ்த்துறை தலைவர் தங்கமணி பேசுகையில், ''இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் மொபைல் போன் காட்சிகளில் மூழ்கி கிடக்கின்றனர்.

அவர்களிடம் புத்தகம் வசிக்கும் பழக்கம் இல்லை. மாணவர்கள் பாட புத்தகங்களை தவிர வேறு நுால்களை படிப்பதில்லை. இப்படி பொழுதை கழிப்பது, எதிர்காலத்தை இருட்டாக்கி விடும். நல்ல புத்தகங்களை வாசிப்பதின் வழியாகதான், அறிவு தேடலையும் ஆற்றல் மிக்க செயல் திறனையும் பெறமுடியும்,'' என்றார்.

கோவை நுாலக ஆணைக்குழு அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட நுாலக கண்காணிப்பாளர் ஜெயகாந்தி, இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் மேலாளர் ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us