தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்கள் தொகை கணக்கெடுப்பு உடற்கல்வி ஆசிரியர்கள் கடுப்பு

 மக்கள் தொகை கணக்கெடுப்பு உடற்கல்வி ஆசிரியர்கள் கடுப்பு

 மக்கள் தொகை கணக்கெடுப்பு உடற்கல்வி ஆசிரியர்கள் கடுப்பு


ADDED : ஜூன் 22, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளதால், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆறு வகையான உடற்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

இத்துடன், ஜோனல், சி.எம். டிராபி, இன்டர்-ஜோனல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இதற்கு மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க வேண்டும்.

போட்டிகளை நடத்தி மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தயார்படுத்தும் பொறுப்பும் உள்ளது. இந்நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'எங்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு எங்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us