தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிரைம் கார்னர்:கோவை

 கிரைம் கார்னர்:கோவை

 கிரைம் கார்னர்:கோவை


ADDED : ஜூன் 22, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கத்தியை காட்டி பணம் பறிப்பு ரத்தினபுரி: கார்த்திக், 42; டிரைவர். தொண்டாமுத்துார் சாலை அஜ்ஜனுார் சாலையில் நின்றுகொண்டு இருந்த போது, இருவர் கத்தியை காட்டி, பாக்கெட்டில் இருந்த 2100 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அளித்த புகாரில், வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி, வடக்குவீதியை சேர்ந்த ராகவன், 23 கவுண்டம்பாளையம் பால முருகன், 39 ஆகிய இருவரைகைது செய்தனர்.

13 சவரன் நகை திருட்டு சிங்காநல்லுார்: தண்டபாணி, 76 என்பவரது வீட்டில், அம்மு என்பவர் கடந்த ஐந்து மாதங்களாக வாரந்தோறும் புதன் கிழமை வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த 15ம் தேதி அலமாரியில் இருந்த, 13 சவரன் நகை காணாமல் போனது. தண்டபாணி போலீசில் புகார் அளித்துள்ளார். பணிக்கு வந்த பெண்ணின் பெயரை தவிர, முகவரி போன்ற எந்த விபரங்களும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

போதைப்பொருள் விற்பனை ஆர்.எஸ்.புரம் போலீசார் சோதனையின் போது, சுக்கிரவார்பேட்டை சாலையில் பெட்டிக் கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. விற்பனையில் ஈடுபட்ட, வடவள்ளி ராஜூவை, 58போலீசார் கைது செய்து புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கடத்தல் வழக்கில் 6 பேர் கைது பீளமேடு: டீக்கடை உரிமையாளர் வேல்முருகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், மதுரையை சேர்ந்த தர்மராஜ் ,32, வெங்கட் பிரபு ,25 துாத்துக்குடி இசக்கிமுத்து, 23 தேனி சசிகுமார், 23 கோவை ரத்தினபுரியை சேர்ந்த சுந்தரமகாலிங்கம்,29 பெங்களூர் சுதீப், 23 ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்தபோது ஜாமின் வாக்குறுதியை வேல்முருகன் நிறைவேற்றவில்லை என்ற ஆத்திரத்தில், சிறையில் உள்ள நாகராஜின், நண்பர்கள் கடத்தி பணம் கேட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

இரு வாகனங்கள் மோதி ஒருவர் பலி பீளமேடு: சேரன்மாநகர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற, சூலுார் ராஜமாணிக்கம், 56 என்பவர் மீது இரண்டுசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்து கீழே விழுந்தார். அப்போது, எதிர்புறம் வந்த காரும் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த திருவாரூர் அரவிந்தன், 26 கார் ஓட்டுநர் பெரம்பூர் ஷாம், 28 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us