தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இளைஞர் கொலை மேலும் நால்வர் கைது

 இளைஞர் கொலை மேலும் நால்வர் கைது

 இளைஞர் கொலை மேலும் நால்வர் கைது


ADDED : ஜூன் 22, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இளைஞரை கொலை செய்து கிணற்றில் வீசிய விவகாரத்தில், ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில், கடந்த 13ம் தேதி, காரமடை மருதுாரை சேர்ந்த கண்ணன், 19, சடலமாக மீட்கப்பட்டார். இவரின் சகோதரி ஜோதிமணியிடம் போலீசார் விசாரித்ததில், கண்ணன் இறப்பில் சந்தேகம் உள்ளது எனவும், கடைசியாக, வசந்தகுமார் அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.

காரமடையை சேர்ந்த வசந்தகுமாரிடம் போலீசார் விசாரித்தனர். இதில், காதல் விவகாரத்தில், கண்ணனை மேட்டுப்பாளையம் அழைத்து வந்து பாரதிராஜா, 20, வசந்தகுமார், 24, ரூத்தீஸ், 22, நசீர், 26, ஆகியோர் தாக்கியதில், கண்ணன் உயிரிழந்தார்.

பயத்தில் அவரது உடலை கிணற்றில் வீசியுள்ளனர். சம்பவம் தொடர்பாக, நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்புடைய, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முகமது சமீர், 27, ஜெகதீஸ், 28, சபீர் அலி, 43, ஹரிஸ் இந்திரஜித், 22 ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us