ADDED : பிப் 19, 2025 09:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நூற்றாண்டு விழா ஆயத்த கூட்டம் நடந்தது.
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட, வடசித்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நேற்று நூற்றாண்டு விழாவுக்கான மூன்றாவது ஆயத்த கூட்டம் நடந்தது.
இதில், பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஸ்டேஜ் அமைத்தல், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொது மக்களை அழைப்பது, நிகழ்ச்சியின் மற்ற ஏற்பாட்டிற்கான பணிகள் குறித்து விரிவாக பேசப்பட்டது.

