/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு துவக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா
/
அரசு துவக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா
ADDED : மார் 26, 2025 10:13 PM

கோவில்பாளையம்:
வையம்பாளையம் துவக்கப் பள்ளியில், நூற்றாண்டு விழா நடந்தது.
சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த, வையம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 1925ம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி துவக்கப்பட்டு, நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து நூற்றாண்டு விழா நடந்தது.
விழாவுக்கு முன்னாள் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை செந்தில் வடிவு வரவேற்றார். விழாவில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
அதிக வருகை புரிந்த மாணவர்கள் மற்றும் வட்டார அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டனர். இப்பள்ளியில் முன்பு பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
வட்டார கல்வி அலுவலர் ரமேஷ் பாபு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஜெகநாதன் உள்பட கல்வியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.