/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு துவக்கப்பள்ளியில் நாளை நுாற்றாண்டு விழா
/
அரசு துவக்கப்பள்ளியில் நாளை நுாற்றாண்டு விழா
ADDED : மார் 21, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கடந்த, 1919ம் ஆண்டு துவங்கப்பட்டது. 106 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் மாணவர்கள், உயர் அலுவலர்களாகவும், அதிகாரிகளாகவும் உயர் பொறுப்பில் உள்ளனர்.
இந்நிலையில், பள்ளியின் நுாற்றாண்டு விழா, ஆண்டு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக, நாளை 23ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர், மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், முன்னாள் மாணவர்கள் செய்து வருகின்றனர்.