/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
' வேலு நாச்சியாருக்கு மத்திய அரசு கவுரவம் '
/
' வேலு நாச்சியாருக்கு மத்திய அரசு கவுரவம் '
ADDED : டிச 25, 2024 10:26 PM
கோவை; கோவையில் உள்ள உலகத் தமிழ்நெறிக் கழகம் சார்பில், வேலு நாச்சியாரின், 228-வது நினைவு நாள் விழா, பொதுப்பணி பொறியாளர் அரங்கில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, உலகத்தமிழ் நெறிக் கழக செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார்.துணைத் தலைவர் குரு பழனிசாமி முன்னிலை வகித்தார். மூத்த தமிழறிஞர் காட்டூர் சம்பத் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
வேலு நாச்சியார் குறித்து ஆய்வு செய்த,புதுச்சேரி கலைவரதன் பேசியதாவது:
மத்திய, மாநில அரசுகள் வேலு நாச்சியாருக்கு, பல கவுரவங்களை அளித்துள்ளன. மத்திய அரசு உ.பி., மாநிலம் துக்ளாபாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு, வேலு நாச்சியார் பெயரை சூட்டி உள்ளது. கடலோர காவல் படை கப்பலுக்கு, வேலு நாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் உள்ள, வேலு நாச்சியாரின் சிலை அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. சுதந்திரத்துக்காக போரிட்ட, முதல் பெண் அரசி என்ற பெருமையை நமக்கு தேடி தந்தவர் வேலு நாச்சியார். இவ்வாறு, அவர் பேசினார்.

