/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசின் திட்டங்கள்; அரசு அதிகாரிகள் குழு ஆய்வு
/
மத்திய அரசின் திட்டங்கள்; அரசு அதிகாரிகள் குழு ஆய்வு
மத்திய அரசின் திட்டங்கள்; அரசு அதிகாரிகள் குழு ஆய்வு
மத்திய அரசின் திட்டங்கள்; அரசு அதிகாரிகள் குழு ஆய்வு
ADDED : ஜூன் 08, 2025 10:34 PM

கருமத்தம்பட்டி; ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை, அரசு அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிட்டாம் பாளையம், அரசூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் செயல்படுத்தப் பட்டுள்ள மத்திய அரசு திட்டங்கள் குறித்து லோக்சபா செயலக பயிற்சி மைய இணை இயக்குனர் நமிதா மாலிக் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
கிட்டாம்பாளையத்தில் உள்ள பசுமை வனம், அம்ரித் சரோவர் குட்டை, ஊராட்சியால் பராமரிக்கப்படும் தோட்டம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
பயனாளிகளை சந்தித்து கருத்துக்கள் கேட்டனர். திட்டங்கள் திருப்திகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக குழுவினர் தெரிவித்தனர். ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கமலக்கண்ணன், திட்டங்கள் செயல்படுத்திய விதம் குறித்து விளக்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜு, ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதேபோல், அரசூர் ஊராட்சியில் தானியங்கி வால்வ் இயக்கம் குறித்து பார்வையிட்டனர்.