டெட் தேர்வு சிக்கல்கள் பற்றி விவரம் கேட்கிறது மத்திய அரசு
டெட் தேர்வு சிக்கல்கள் பற்றி விவரம் கேட்கிறது மத்திய அரசு
ADDED : ஜன 09, 2026 05:06 AM
கோவை: ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனையில் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகள் விரிவான புள்ளிவிவரங்களை ஜன.16க்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து மத்திய அரசுக்கு ஏராளமான கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன.
அதில், பணிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என்பது மன உளைச்சலையும், சிரமத்தையும் ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக பணியாற்றியவர்களின் நிதி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கும்; அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் வெளியேறினால் கல்வித்துறையில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. எத்தனை ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற துல்லியமான எண்ணிக்கையை தரவுகளுடன் அனுப்புமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுள்ளது.
