/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசின் விளையாட்டு போட்டிகள் துவங்கியது
/
மத்திய அரசின் விளையாட்டு போட்டிகள் துவங்கியது
ADDED : நவ 22, 2025 06:58 AM

மேட்டுப்பாளையம்: -: மத்திய இனை அமைச்சர் முருகன் ஏற்பாட்டில், மேட்டுப்பாளையத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் 'கேலோ இந்தியா பிட் இந்தியா' திட்டத்தில் 'சன்சத் கேல் மஹோத்சவ் 2025' விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது.
நாடு முழுவதும், ஒவ்வொரு நாடளுமன்ற தொகுதியிலும், மத்திய அரசு சார்பில் 'சன்சத் கேல் மஹோத்சவ் 2025' விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ராம் பேட்மிட்டன் அகாடமி உள்விளையாட்டு அரங்கில் இந்த விளையாட்டுப் போட்டிகள், மத்திய இணை அமைச்சர் முருகன் ஏற்பாட்டில், நேற்று முதல் துவங்கியது. இறகுபந்து, கோ கோ, சிலம்பம், கால்பந்து, யோகா, கபடி உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம், காரமடை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.15 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள், அதற்கும் மேற்பட்டோருக்கு என வயதுக்கு ஏற்றாற்போல், தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியை பா.ஜ., செயலாளர் நந்தகுமார், டாக்டர் விஜயகிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ. தலைவர் மாரிமுத்து, மாவட்ட பொதுச்செயலாளர் விக்னேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் உள்ளிட்ட பா.ஜ.,நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இறுதி போட்டிகள் டிசம்பர் 25ம் தேதி நடைபெறுகிறது. ---

