sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 25, 2025 ,புரட்டாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

7 ஆண்டுகளில் 579 வேளாண் கருவிகளுக்கு தரச்சான்று வழங்கி மத்திய ஆய்வகம் அபாரம்

/

7 ஆண்டுகளில் 579 வேளாண் கருவிகளுக்கு தரச்சான்று வழங்கி மத்திய ஆய்வகம் அபாரம்

7 ஆண்டுகளில் 579 வேளாண் கருவிகளுக்கு தரச்சான்று வழங்கி மத்திய ஆய்வகம் அபாரம்

7 ஆண்டுகளில் 579 வேளாண் கருவிகளுக்கு தரச்சான்று வழங்கி மத்திய ஆய்வகம் அபாரம்


ADDED : ஆக 20, 2025 10:00 PM

Google News

ADDED : ஆக 20, 2025 10:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில், பண்ணைக் கருவிகள் மற்றும் அறுவடை பின்சார் கருவிகள் தரச்சான்று மையம் அமைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மானியத் திட்டங்களின் கீழ் வேளாண் கருவிகளை விற்பதற்கு, இங்கு தரச்சான்று பெறுவது அவசியம்.

இதுதொடர்பாக, முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் கூறியதாவது:

டிராக்டரில் இணைத்துச் செயல்படும் கருவிகள், மோட்டாருடன் இணைந்த கருவிகள், ஆட்களால் இயக்கப்படும் பவர்டில்லர் போன்ற கருவிகள், மாடுகளை இணைத்து இயக்கப்படும் கருவிகள், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளுக்கு சான்றுகள் வழங்குகிறோம்.

இதுவரை, 579 கருவிகளுக்கு தரச்சான்று வழங்கியுள்ளோம். 189 தயாரிப்பு நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. துல்லியமாகவும் வேகமாகவும் தரச்சான்று வழங்குகிறோம்; அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடியாகும். மானிய திட்டத்தில் பயன் பெறாதவர்களுக்கு கட்டாயமில்லை.

தங்களின் தயாரிப்புகளின் திறனைப் பரிசோதிக்க, நிறுவனங்கள் 'கான்பிடென்ஷியல்' பரிசோதனை மேற்கொள்ளும்; அதையும் செய்து தருகிறோம்.

இச்சான்றை வைத்து, மத்திய - மாநில அரசு களின் மானிய திட்டங்களில் தங்கள் தயாரிப்புகளை இணைக்கலாம். ஏற்றுமதியில் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் கூடுதல் சிறப்பம்சமாக காட்டலாம். வங்கிகளும் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கும்போது, கூடுதல் ஆவணமாக பரிசீலிக்கின்றன.

மத்திய அரசு நிர்ணயித்துள்ள பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 0422 - 2472624 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us