/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் குப்பை கிடங்கில் மத்திய குழு... இன்று ஆய்வு
/
வெள்ளலுார் குப்பை கிடங்கில் மத்திய குழு... இன்று ஆய்வு
வெள்ளலுார் குப்பை கிடங்கில் மத்திய குழு... இன்று ஆய்வு
வெள்ளலுார் குப்பை கிடங்கில் மத்திய குழு... இன்று ஆய்வு
ADDED : பிப் 12, 2026 05:11 AM

கோவை : கோவையில் சேரும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டப்படுகிறது. 150 ஏக்கர் பரப்பில் மலை போல் குப்பை அங்கு குவிந்திருக்கிறது. அதனால் நிலத்தடி நீர் பாழ்பட்டது; காற்று மாசடைந்தது. புகார்கள் அதிகமானதால் தமிழக, மத்திய அரசுகளின் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் வந்தனர். ஆய்வு செய்தனர். குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பது உண்மை தான் என உறுதி செய்தனர். திறந்தவெளியில் குப்பை கொட்டக்கூடாது என மாந கராட்சியிடம் தெரிவித்தனர்.
''பழைய குப்பையை 'பயோமைனிங்' முறையில் அழிக்கிறோம்; மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கிறோம். மின்சாரமும் தயாரிக்க போகிறோம். மரக்கன்றுகள் நட்டு அந்த பகுதியையே பசுஞ்சோலை ஆக்கி வருகிறோம்” என அதிகாரிகள் அடிக்கடி பேட்டி கொடுக்கின்றனர்.
ஆனால், திறந்த வெளியில் குப்பை கொட்டு வதை மாநகராட்சி நிறுத்தவில்லை. 10 கி.மீ. சுற்றுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி மீது கோபம் கொண்ட மக்கள், மத்திய அரசுக்கு புகார் அனுப்பினர். சுற்றுச்சூழல் அமைச்சகம் அதை பரிசீலனை செய்தது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளை கோவைக்கு அனுப்பியது. அவர்கள் வெள்ளலுார் கிடங்கு பிரச்னைகளை அலசி ஆராய்ந்தனர். என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்று மாநகராட்சிக்கு அறிக்கை கொடுத்தனர். இனிமேல் குப்பை கொட்டக் கூடாது என்பது அந்த அறிக்கையில் இருந்த முக்கிய ஆலோசனை.
அதையும் மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது.
இச்சூழலில், 2024ல் நடந்த தீ விபத்து தொடர்பாக, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கும் வழக்கில், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் சேர்க்கப்பட்டது; 28ல் நடைபெறும் விசாரணையில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனால், வெள்ளலுார் குப்பை கிடங்கில் தற்போது என்ன நடக்கிறது என்பதை அறிய, மத்திய குழுவினர் இன்றும் (12ம் தேதி) நாளையும் (13ம் தேதி) வெள்ளலூர் வந்து ஆய்வு செய்கின்றனர்.
இன்று அவர்கள் வருவதால், நேற்று முன்தினமே மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் குப்பை கிடங்கை சென்று பார்த்தார்.
'பயோமைனிங்' செய்தல், உரம் தயாரித்தல், மரக்கன்று பராமரித்தல், குப்பையை தரம் பிரிக்கும் பணிகளை பார்வையிட்டார். வளாகத்தை சுத்தப்படுத்த உத்தரவிட்டார்.
வார்டுக்கு 5 பேர் வீதம் 500 துாய்மை பணியாளர்கள் வெள்ளலுார் விரைந்தனர். மத்திய குழுவினர் செல்ல இருக்கும் பாதைகளை சுத்தம் செய்தனர். மத்திய குழுவின் பாதகமான கருத்துகளை தவிர்க்க, குப்பை கிடங்கில் வேறு என்ன மேம்பாட்டு பணிகள் செய்யலாம் என்று ஆராய நாளை ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

