/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் 'சென்டம்' உறுதி; மாணவ, மாணவியர் திட்டவட்டம்
/
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் 'சென்டம்' உறுதி; மாணவ, மாணவியர் திட்டவட்டம்
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் 'சென்டம்' உறுதி; மாணவ, மாணவியர் திட்டவட்டம்
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் 'சென்டம்' உறுதி; மாணவ, மாணவியர் திட்டவட்டம்
ADDED : மார் 09, 2024 07:29 AM

பிளஸ் 2 மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பொதுத் தேர்வு நேற்று நடந்த நிலையில், வினாக்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 37 மையங்களில் நடக்கிறது. அவ்வகையில், நேற்று, பிளஸ் 2 மாணவர்களுக்கான, கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், புள்ளியியல், சிறப்பு மொழிப்பாடம், அடிப்படை இயந்திரவியல் பொதுத்தேர்வு நடந்தது.
அதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வை 1,270 மாணவர்கள், 1,405 மாணவியர் என, 2,675 பேர் தேர்வு எழுதினர். 86 மாணவர்கள், 70 மாணவியர் என, 156 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். இதேபோல, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வை, 966 மாணவர்கள், 1,027 மாணவியர் என, மொத்தம், 1,993 பேர் எழுதினர். 13 மாணவர்கள், 5 மாணவியர் என, 18 பேர் தேர்வு எழுதவில்லை.
புள்ளியியல் தேர்வை, 107 மாணவர்கள், 115 மாணவியர் என, 222 பேர் எழுதினர். 5 மாணவர்கள், ஒரு மாணவியர் என, 6 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர்.இதேபோல சிறப்பு மொழிப்பாடத் தேர்வை, 11 மாணவர்கள், 10 மாணவியர் என, 21 பேர் எழுதினர். எவரும் 'ஆப்சென்ட் ஆகவில்லை.
அடிப்படை இயந்திரவியல் தேர்வை, 35 மாணவர்கள், 6 மாணவியர் என, 41 பேர் எழுதிய நிலையில், 15 மாாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.
தேர்வு குறித்து மாணவர்கள் கருத்துவருமாறு:
கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி திவ்யா: கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களில் ஒன்று, அகவினா கேட்கப்பட்டிருந்தது. அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களும் சரியாக எழுதியுள்ளேன். இரண்டு மதிப்பெண் வினாக்கள் மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் அனைத்தும், படித்து பயிற்சி பெற்ற வினாக்களாகவே இருந்ததால் விரைந்து பதில் எழுத முடிந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் மிக எளிமையாக இருந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும்.
பரணி: கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வுக்கு தீவிர பயிற்சி எடுத்திருந்த நிலையில், இரண்டு மதிப்பெண் வினாக்களை விரைந்து எழுத முடிந்தது. மூன்று மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும், புற வினாக்களில் இருந்து வந்தது. அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் அளித்துள்ளால், நுாறு சதவீத மதிப்பெண் பெறுவது உறுதி.
ஹரிதா: இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. கட்டாய வினா எளிமையக இருந்ததால், விரைந்து சரியாக பதில் எழுத முடிந்தது. தேர்வு அறையில் வினத்தாளைப் பார்க்கும் வரை பயமாக இருந்து. அதேநேரம், வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்ததால், மகிழ்ச்சியாக பதில் எழுதினேன். முழு மதிப்பெண் கிடைக்கும்.
கேசவ் வித்யா மந்திர் பள்ளி மாணவர் ஹரிபிரசாத்:கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில், ஒரு மதிப்பெண்கள் உள்பட அனைத்து வினாக்களுமே மிகவும் எளிமையான இருந்தது. அனைத்து வினாக்களும் பாடப் புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து கேட்கப்பட்டது. அனைத்து வினாக்களுக்கும் மிக எளிதாகவும் விடை அளிக்க முடிந்தது. கண்டிப்பாக, நுாறு மதிப்பெண்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.
ரித்திகா:கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு, மிகவும் எளிதாக இருந்தது. தீவிர பயிற்சி எடுத்திருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் உரிய நேரத்தில் விடை எழுத முடிந்தது. பாடத்தின் உள்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படவில்லை. தேர்வில், அனைத்து மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண்கள் பெறுவர். அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் அளித்துள்ளால், எனக்கும் முழு மதிப்பெண் கிடைக்கும்.
உடுமலை
உடுமலை கோட்டத்தில், பிளஸ் 2 கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடங்களுக்கான தேர்வு நடந்தது.
தேர்வு குறித்து, உடுமலை விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கூறியதாவது:
பிரியதர்ஷினி: கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு, எதிர்பார்த்த வகையில் கேட்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நடந்த தேர்வுகளில் உள்ள வினாக்கள் இடம் பெற்றிருந்ததால், குறுகிய நேரத்தில் விடை எழுதுவதற்கு வசதியாக இருந்தது. பயிற்சி தேர்வுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டன.
சுஜிதா: கம்ப்யூட்டர் சயின்ஸ் வினாத்தாள் அனைவரும் நன்றாக எழுதும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. பதற்றத்தோடு தேர்வை துவங்கினோம். ஆனால் தேர்வு வினாத்தாளை பார்த்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. வினாக்கள் அனைத்தும் நன்கு அறிந்தவையாகவே இருந்தன.
தீபிகா: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், ஒரு மதிப்பெண் உட்பட அனைத்து வினாக்களும், புத்தகத்தின் நேரடி வினா பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருந்தது. வகுப்பு தேர்வுகளின் போதே, இந்த வினாக்களை நன்றாக பயிற்சி செய்திருந்தோம். இதனால் எளிமையாக விடை எழுதி விட்டோம். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட சில வினாக்களும் வந்திருந்தது.
அகல்யா: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், ஒரு மதிப்பெண் வினாவில் எந்த பிரச்னையும் இல்லை. இரண்டு மதிப்பெண் வினாக்களும், வழக்கம் போல் கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண் வினாக்களில் மட்டும், சில வினாக்கள் நேரடியாக இல்லாமல் 'டிவிஸ்ட்' செய்து கேட்டிருந்தனர். இருப்பினும், எளிதாக பதிலளிக்கும் வகையில் இருந்தது.
அங்குசெல்வி: கம்யூட்டர் சயின்ஸ் பாட தேர்வு எளிமையாகவே இருந்தது. ஐந்து மதிப்பெண் வினா பிரிவில் மட்டும், நேரடி வினாக்களை சிறிது மாற்றி கேட்டிருந்தனர். ஒரு மதிப்பெண் வினாக்களை பார்த்ததுமே, வினாத்தாள் எளிமையாக இருக்கும் என, நம்பிக்கை வந்தது. இந்த தேர்வில் எளிதாக 'சென்டம்' கிடைக்கும்.
- நிருபர் குழு -