/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவ கல்லுாரிகளில் சான்றிதழ் படிப்பு; 234 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
அரசு மருத்துவ கல்லுாரிகளில் சான்றிதழ் படிப்பு; 234 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு மருத்துவ கல்லுாரிகளில் சான்றிதழ் படிப்பு; 234 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு மருத்துவ கல்லுாரிகளில் சான்றிதழ் படிப்பு; 234 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : செப் 26, 2025 05:44 AM
கோவை; கோவை அரசு மருத்துவ கல்லுாரிகளில், 2025-26ம் கல்வியாண்டுக்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில், மாவட்ட அளவில் சேர்க்கை செயல்பாடுகள் துவங்கியுள்ளன. தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு மருத்துவ கல்லுாரிகளில், கார்டியோ சோனோ கிராபி டெக்னீசியன் (பெண்கள்) - 4, இ.சி.ஜி., டிரெட்மில் டெக்னீசியன் - 46, கார்டியாக் கேத்தரைசேஷன் லேப் டெக்னீசியன் (ஆண்கள்) - 7, அவசர சிகிச்சை டெக்னீசியன் - 17, சுவாச சிகிச்சை டெக்னீசியன் - 19, டயாலிசிஸ் டெக்னீசியன் - 15, மயக்க மருந்து டெக்னீசியன் - 24, தியேட்டர் டெக்னீசியன் - 24, எலும்பியல் டெக்னீசியன் - 33, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 41 உட்பட, 234 இடங்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர், 2025 டிச. நிலவரப்படி, 17 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு, 5 சதவீத இட ஒதுக்கீடு, அரசின் பிற ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும்.
கலெக்டர் அலுவலக உதவி மையத்திலும், கோவை மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் கட்டணமின்றி வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, செப்., 30 அல்லது அதற்கு முன், அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் அல்லது துணை முதல்வர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அக்., 3ல் தகுதி பட்டியல் வெளியிடப்பட்டு, அன்றே கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள், மேல்நிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வயது சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.