/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூச்சிக்கொல்லி அடிப்பதில் பத்திரம்
/
பூச்சிக்கொல்லி அடிப்பதில் பத்திரம்
ADDED : ஜூலை 13, 2025 05:46 AM
கோவை : கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு, சாரல் மழை பெய்யக்கூடும். காற்று மணிக்கு 12 முதல் 28 கி.மீ., வேகம் வரை வீசக்கூடும். சாதகமான வானிலையைப் பயன்படுத்தி, களை எடுத்தல், உரமிடல், பூச்சிக்கொல்லி தெளித்தல் போன்ற பயிர் மேலாண்மையை மேற்கொள்ளலாம்.
அதிக காற்றின் வேகத்தினால், மருந்துத் துளிகள் மற்ற பயிர்களைப் பாதிப்பதைத் தவிர்க்க, பூச்சிக் கொல்லியை காற்று இல்லாத சமயங்களில் தெளிக்கவும்,
சமீபத்தில் விதைத்த பச்சைப்பயறு, உளுந்து போன்ற பயிர்களில் பாடுபாசி பார்த்து விதைக்கவும். வெங்காயத்தில் இலைப்பேன் வர வாய்ப்பிருப்பதால், நோய் மேலாண்மை மேற்கொள்ளவும். தென்னையில் காய்களை அறுவடை செய்தபின், அடித்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, வேர் வாயிலாக ஹெக்சகோனசோல் மருந்தை, ஒரு மில்லி மருந்தை 100 மில்லி நீருடன் கலந்து செலுத்தவும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.