/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
/
சங்கப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
ADDED : ஆக 10, 2025 10:50 PM

கோவை, ; கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்கு உட்பட்ட கடன் சங்கங்களின் நிரந்தர வைப்பு தொகை சேகரிப்பதில், சிறப்பாக பணியாற்றிய சங்கப் பணியாளர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி தலைமையில், மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்கு உட்பட்ட அனைத்து விதமான கடன் சங்கங்களின் நிரந்தர வைப்பு தொகை சேகரிப்பதில், சிறப்பாக பணியாற்றிய சங்கப் பணியாளர்களை பாராட்டி, சான்றிதழ் வழங்கப்பட்டது. நிரந்தர வைப்பு தொகையை அதிகமாக சேகரித்த மத்வராய புரம், வெங்கிட்டாபுரம், அக்கரை செங்கம்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உட்பட 30 சங்கப் பணியாளர்கள் பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.
சங்கத்தை வலுப்படுத்துதல், கடன் நிலுவைத் தொகையை ரூ.6 கோடியில் இருந்து ரூ.8 கோடியாக அதிகப்படுத்தவும், நிரந்தர வைப்பு தொகை நிலுவை குறைந்தபட்சம் ரூ.3 கோடி சேகரித்திடவும் கேட்டுக் கொண்டார்.
மாதந்தோறும் அதிகமாக வைப்பு தொகை சேகரிப்பவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.