/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சென்டம்' பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
/
'சென்டம்' பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
ADDED : செப் 03, 2025 11:18 PM
கோவை; 2024-25 கல்வியாண்டில், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், 10ம் வகுப்பில் 41 அரசு பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. 12ம் வகுப்பில் 21 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 12 அரசு உதவி பெறும் பள்ளிகள் பாராட்டு சான்றிதழுக்கு தகுதி பெற்றுள்ளன.
தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண், 10ம் வகுப்பில் கோவையில் மூன்று மாணவர்கள் உட்பட மாநிலம் முழுவதும் 8 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 12ம் வகுப்பில் 135 அரசு பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர். திருச்சியில் 7ம் தேதி நடைபெற உள்ள விழாவில், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.