/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானப்படை அலுவலருக்கு பாராட்டு சான்றிதழ்
/
விமானப்படை அலுவலருக்கு பாராட்டு சான்றிதழ்
ADDED : ஜூன் 03, 2025 12:04 AM

சூலுார் : சூலுார் விமானப்படை அலுவலருக்கு, சிறந்த பணிக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் சேனா பதக்கம் வழங்கப்பட்டது.
சூலுார் அடுத்த காங்கயம்பாளையத்தை சேர்ந்தவர் ஜீனா ஜோட்டி குரியன். சூலுார் விமானப்படைத் தளத்தில் சிவிலியன் கெஜட்டட் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும், அவரது அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் கூடிய பணி, விமானப்படைக்கு பலனளிக்கும் வகையில் இருந்ததால், விமானப்படைத் தளபதியின் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் பெறுவதற்கு தேர்வு பெற்றார்.
சூலுார் விமானப்படைத்தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், விமானப்படை ஏர் கமோடர் விஷ்ணு கவுர், பாராட்டு சான்றிதழ் மற்றும் சேனா பதக்கத்தை, ஜீனாவுக்கு வழங்கினார்.
திருச்சூரை பூர்வீகமாக கொண்ட இவரது கணவர் ஜோட்டி குரியன், தமிழக நெடுஞ்சாலைத்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இரு மகன்கள் உள்ளனர். பதக்கம் பெற்றது குறித்து ஜீனா கூறுகையில், பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊக்கத்தை அளித்துள்ளது, என்றார்.