sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'உணவு சார்ந்த தொழிலுக்கு தரச்சான்று பெறுவது அவசியம்'

/

'உணவு சார்ந்த தொழிலுக்கு தரச்சான்று பெறுவது அவசியம்'

'உணவு சார்ந்த தொழிலுக்கு தரச்சான்று பெறுவது அவசியம்'

'உணவு சார்ந்த தொழிலுக்கு தரச்சான்று பெறுவது அவசியம்'


ADDED : மார் 01, 2024 10:35 PM

Google News

ADDED : மார் 01, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;''உணவு சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து, சான்றிதழ் பெறவேண்டியது அவசியம்,'' என, வேளாண் பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மைய பேராசிரியர் வீரண்ணன் அருணகிரி தெரிவித்தார்.

உணவு தரத்தை உறுதி செய்ய, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. உணவு சார்ந்த தொழில் ஈடுபடுபவர்கள், எப்.எஸ்.எஸ்.ஐ., பதிவு செய்து இருக்க வேண்டியது அவசியம்.

சமீபகாலமாக, எப்.எஸ்.எஸ்.ஐ., பதிவு மட்டுமின்றி, குறிப்பிட்ட கால இடைவெளியில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து, தரச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், என்.ஏ.பி.எல்., அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் செயல்பாட்டில் உள்ளது. தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்பு உணவு பொருட்களை, இங்கு ஆய்வு செய்து தரச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து, வேளாண் பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மைய பேராசிரியர் வீரண்ணன் அருணகிரி கூறியதாவது:

இங்குள்ள ஆய்வகத்தில், உணவில் உள்ள, மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு, நார்ச்சத்து, அனைத்து வகை தாது உப்புகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள், நுண்ணுயிரிகள் பாதுகாப்பான அளவில் உள்ளதா போன்ற அனைத்து பரிசோதனையும் செய்யப்படும்.

தரச்சான்றிதழ் குறிப்பிட்ட கால இடைவெளியில் சமர்ப்பிக்காத பட்சத்தில், எப்.எஸ்.எஸ்.ஐ., பதிவு ரத்து செய்யப்படும்.

பொருட்களின் பிராசசிங், மூலப்பொருட்கள் வாயிலாக, தரத்தில் மாற்றங்கள் ஏதும் இருப்பின் அதை இந்த ஆய்வுகள் வாயிலாக தெரிந்துகொள்ள இயலும்.

பொருட்களை ஆய்வுக்கு கொடுத்தால், குறைந்தபட்சம், 15 - 20 நாட்களில் முடிவுகள் வழங்கப்படும். இதுகுறித்த விபரங்கள் பெற, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தை அணுகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us