/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.,ல் பிப்., 17 வரை கர்ப்பப்பை வாய் பரிசோதனை
/
கே.எம்.சி.எச்.,ல் பிப்., 17 வரை கர்ப்பப்பை வாய் பரிசோதனை
கே.எம்.சி.எச்.,ல் பிப்., 17 வரை கர்ப்பப்பை வாய் பரிசோதனை
கே.எம்.சி.எச்.,ல் பிப்., 17 வரை கர்ப்பப்பை வாய் பரிசோதனை
ADDED : ஜன 27, 2024 12:05 AM
'கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிப்., 17ம் தேதி வரை, சலுகை கட்டணத்தில் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
இது குறித்து, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி கூறியதாவது:
கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 'ஹூயூமன் பாப்பிலோமா' (எச்.பி.வி.,) என்ற வைரஸ் வாயிலாக ஏற்படுகிறது. 80 - 90 சதவீத பெண்களுக்கு இது ஏற்படலாம்; 10 - 15 சதவீதம் பேருக்கு புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது.
அறிகுறி இருக்காது. குறிப்பிட்ட காலத்தில் பரிசோதனை செய்து வருவதன் வாயிலாகத்தான் கண்டறிய முடியும். பரிசோதனை மற்றும் உரிய சிகிச்சை வாயிலாக குணப்படுத்தி, புற்றுநோயை தடுக்கலாம்.
இதற்கு இரு வகையான பரிசோதனைகள் உள்ளன. முதலாவது, பேப் ஸ்மியர் பரிசோதனை. இதில், கர்ப்பப்பை வாயில் இருந்து, செல் எடுத்து பரிசோதிக்கப்படும்.
இரண்டாவது, அதிநவீன எச்.பி.வி., இதில், செல்லை நேரடியாக பகுப்பாய்வு செய்து அதில் வைரஸ் உள்ளதா என கண்டறியப்படும். எச்.பி.வி., தடுப்பூசி போட்டுக் கொண்டால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கலாம்.
பெண்களுக்கு இவ்வகை பரிசோதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கே.எம்.சி.எச்.,ல் கர்ப்பப்பை வாய் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது; ஜன., 18ல் துவங்கிய இம்முகாம், பிப்., 17 வரை நடக்கிறது.
முகாமில், சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள், தடுப்பூசியும், இலவசமாக ஆலோசனையும் வழங்கப்படுகிறது. 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது அதிக ரத்தப்போக்கு, காரணம் தெரியாத எடை இழப்பு, பசியின்மை, வெள்ளைப்படுதல், அடிவயிற்றில் தொடர்ந்து வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளோர் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
முன்பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு, 87548 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

