/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவரை தாக்கி செயின், பணம் பறிப்பு
/
மாணவரை தாக்கி செயின், பணம் பறிப்பு
ADDED : ஆக 16, 2025 09:27 PM
கோவை; ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரை சேர்ந்தவர் நிஷாந்த், 21. கோவை கல்லுாரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சரவணம்பட்டி சின்னமேட்டுப்பாளையம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி உள்ளார்.
சுதந்திரதின விடுமுறை என்பதால் வீட்டில் நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு, துாங்கிக் கொண்டிருந்தார். கதவை தாழ் போடாமல் சாத்தி இருந்தனர். அப்போது நான்கு நபர்கள் வீட்டில் நுழைந்து நிஷாந்தையும் நண்பர்களையும் கிரிக்கெட் பேட், ஸ்டம்ப்களால் அடித்து உதைத்தனர். நிஷாந்தின் இரண்டு பவுன் செயின், வெள்ளி பொருட்கள், ஸ்டட், ரூ.6900 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.
நிஷாந்த் புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதேபகுதியை சேர்ந்த பிரதீப், 32, ஹரிஹாந்த், 30, திவாகர், 30 உள்ளிட்ட நான்கு பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.

