/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருவரிடம் செயின் பறிப்பு; போலீசார் தீவிர விசாரணை
/
இருவரிடம் செயின் பறிப்பு; போலீசார் தீவிர விசாரணை
ADDED : ஜூன் 11, 2025 07:33 PM
கோவை; சிங்காநல்லுார் மற்றும் பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில், இரு பெண்களிடம் இருந்து மர்ம நபர்கள் செயின் பறித்து சென்றனர்.
சிங்காநல்லுார், இருகூர் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம், 80; இவர் மாலை நடை பயிற்சி மேற்கொண்டு இருந்த போது, இருகூர் முத்துராமலிங்க தேவர் வீதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த, நான்கு சவரன் செயினை பறித்து சென்றார்.
இதேபோல், பீளமேடு, பி.எம்.ஆர்., லே அவுட் பகுதியில் அபிராம சுந்தரி, 40 என்பவர் அருகில் உள்ள கடைக்கு சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரின் செயினை பறித்து சென்றனர்.
ஒரே நேரத்தில் இரண்டு செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதால், ஒரே கும்பல் தொடர் செயின் பறிப்பில் ஈடுபடுகிறதா என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். இவ்விரு சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.