/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மிளகாய் பொடி துாவி பெண்ணிடம் செயின் பறிப்பு
/
மிளகாய் பொடி துாவி பெண்ணிடம் செயின் பறிப்பு
ADDED : மே 24, 2025 11:31 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி சுஜாதா, 50; இவர் சிறுமுகை அடுத்த சம்பரவள்ளிபுதூரில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம், உணவு இடைவேளையின் போது, கடையின் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஹெல்மெட் அணிந்தவாறு, ரேஷன் கடையின் உள்ளே வந்தார். சுஜாதாவின் முகத்தில் மிளகாய் பொடியை துாவினார்.
அவர் சுதாரிப்பதற்குள், கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். பணியாளர் கூச்சலிட்டுள்ளார்.
அப்போது அங்கு யாரும் இல்லாததால், வாலிபரை பிடிக்க முடியாமல் போனது. புகாரின்படி சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பிச் சென்ற வாலிபரை தேடிவருகின்றனர்.