ADDED : ஜன 06, 2024 12:32 AM
பொள்ளாச்சி;சென்னை, மதுரையில் செயல்படும் பிரபல நகைக்கடையான, சலானி ஜுவல்லரி நிறுவனத்தின் பிரத்தியேக நகை கண்காட்சி, பொள்ளாச்சியில் ஹோட்டல் மாதவா இன்னில் நேற்று தொடங்கியது. நாளை, 7ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.
கண்காட்சியை ஹோட்டல் மாதவா இன், லலிதா பூபதி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மணமகள் திருமண நகைகள், லைட் வெயிட் கலெக்சன், ஆன்டிக் நகைகள், டைமண்ட் நகைகள், தெய்வீகமான டெம்பிள் நகைகள், வெள்ளி பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
பழைய நகைகளை கொடுத்து, புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளலாம். காலை, 10:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை கண்காட்சி நடைபெறும் என, சலானி ஜுவல்லரி மார்ட் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
இக்கண்காட்சியில், ராஜேஸ்வரி அண்டு கோ ராஜேஸ்வரி, பாலு கெமிக்கல்ஸ் யசோதா பாலு, ரோட்டரி, லயன்ஸ் நிர்வாகிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்றனர்.