/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயத்திலுள்ள சவால்கள்; கிராமப்புற மதிப்பீட்டு பணி
/
விவசாயத்திலுள்ள சவால்கள்; கிராமப்புற மதிப்பீட்டு பணி
விவசாயத்திலுள்ள சவால்கள்; கிராமப்புற மதிப்பீட்டு பணி
விவசாயத்திலுள்ள சவால்கள்; கிராமப்புற மதிப்பீட்டு பணி
ADDED : நவ 27, 2024 09:24 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, ஆண்டிபாளையம் ஊராட்சியில் அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி திட்டத்தின் கீழ், ஆண்டிபாளையம் ஊராட்சியில் உள்ள விவசாயிகளை சந்தித்து, தென்னை மரத்தில் உள்ள வாடல் நோய், பயிர்களில் ஏற்படும் நோய் தாக்குதல், வேலையாட்கள் பற்றாக்குறை, கால்நடை வளர்ப்பு பிரச்னைகள் குறித்து விளக்கி, கிராமப்புற மதிப்பீடு செய்தனர்.
மேலும், சிக்கல் பகுப்பாய்வு மரம் வரைந்து, விவசாயத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்கம் அளித்தனர். தினசரி காலண்டர் வரைந்து நாள் ஒன்றுக்கு, எந்தெந்த பணிக்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வது என, விவசாயிகளின் பணியை பட்டியலிட்டனர். நிகழ்ச்சியில், ஆண்டிபாளையம் ஊராட்சித் தலைவர் சிதம்பரம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.