/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ரீகிரியேஷன் கிங்ஸ் வெற்றி
/
சேம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ரீகிரியேஷன் கிங்ஸ் வெற்றி
சேம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ரீகிரியேஷன் கிங்ஸ் வெற்றி
சேம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ரீகிரியேஷன் கிங்ஸ் வெற்றி
ADDED : ஆக 13, 2025 08:22 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சேம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், ரீகிரியேஷன் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
எம்.எஸ்.ஏ. லைவ் ஸ்ட்ரீமர்ஸ் சார்பிலான பொள்ளாச்சி சேம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி, கிணத்துக்கடவு எம்.எஸ்.ஏ. ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில், ஷேப் லையன்ஷ், ரியல் ஹிட்டர்ஸ், பொள்ளாச்சி சூப்பர் கிங்ஸ், பொள்ளாச்சி ரீகிரியேஷன் கிங்ஸ், உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டன.
இறுதிப் போட்டியில், பொள்ளாச்சி ரீகிரியேஷன் கிங்ஸ் அணி, ரியல் ஹிட்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய ரியல் ஹிட்டர்ஸ் அணி 130 ரன்கள் எடுத்தது. ரீகிரியேஷன் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு, 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில், சிறந்த பேட்ஸ்மேனாக ரியல் ஹிட்டர்ஸ் அணி வீரர் கோகுல், தொடர் நாயகனாக ராஜ்குமார், சிறந்த பவுலராக ஸ்ரீநிரஞ்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, விருதும் வழங்கப்பட்டது.