/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் அதிகனமழைக்கு வாய்ப்பு; விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
/
கோவையில் அதிகனமழைக்கு வாய்ப்பு; விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
கோவையில் அதிகனமழைக்கு வாய்ப்பு; விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
கோவையில் அதிகனமழைக்கு வாய்ப்பு; விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?
ADDED : ஆக 06, 2025 10:17 PM
கோவை; கோவை, வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் காலநிலை ஆய்வு மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை:
இன்று கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யக்கூடும். நாளை ஆங்காங்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சராசரியை விட கூடுதல் மழையும், வெப்பநிலை வழக்கத்தை விட குறைவாகவும் பதிவாகும்.
கனமழை முதல் மிக கனமழையும், மணிக்கு 10 முதல் 26 கி.மீ., வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்பதால், போதிய வடிகால் வசதி செய்ய வேண்டும். மழை காரணமாக, பூச்சிக்கொல்லி தெளிப்பது, நடவு உள்ளிட்ட வேலைகளை ஒத்தி வைக்கவும்.
பருத்தி விதைப்பை, மழையைப் பொறுத்து தீர்மானிக்கவும். மண் வழி உரமிடலைத் தவிர்க்கவும். மக்காச்சோள விதைப்பை ஒத்தி வைக்கவும்.
மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்கம் தென்பட்டால், புளூபென்டமைடு 20 சதவீதம் டபிள்யூஜி மருந்து எக்டருக்கு, 250 கிராம் என்ற அளவில் தெளிக்கவும். 5 மாதங்களுக்கு மேற்பட்ட, கரும்புக்கு தோகை உரிக்கவும். வாழைக்கு முட்டுக் கொடுக்கவும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.