ADDED : நவ 06, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை:
அடுத்த மூன்று நாட்களுக்கு கோவையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழையை எதிர்பார்க்கலாம். தென்மேற்கு பருவக்காற்று வீசும்.
சம்பா நெல்லுக்கு பரிந்துரைக்கப்பட்ட மேலுரம் இடவும். மழையில்லா நாட்களில், கொண்டைக்கடலை மற்றும் கொத்தமல்லி விதைக்க, நிலம் தயார் செய்யலாம். பருத்தியில் தயிர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். மஞ்சளில் வேர், கிழங்கு அழுகலைத் தவிர்க்க வடிகால் வசதி செய்து, லிட்டருக்கு 5 மில்லி பேசில்லஸ் சப்டில்லஸ் நீரில் கரைத்து வேருக்கு அருகில் ஊற்றவும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

