/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒப்பந்த முறையில் மாற்றம்: வேட்டை தடுப்பு காவலர்கள் புகார்
/
ஒப்பந்த முறையில் மாற்றம்: வேட்டை தடுப்பு காவலர்கள் புகார்
ஒப்பந்த முறையில் மாற்றம்: வேட்டை தடுப்பு காவலர்கள் புகார்
ஒப்பந்த முறையில் மாற்றம்: வேட்டை தடுப்பு காவலர்கள் புகார்
ADDED : நவ 23, 2024 02:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தமிழக வனத்துறையில், 1,000க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு வனத்துறையின் கண்காணிப்பில் ஊதியம் வழங்கப்பட்டது.
இந்த நடைமுறை கடந்த இரண்டு மாதங்களாக மாற்றப்பட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோராக வேட்டை தடுப்பு காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள், கோவை தலைமை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியத்திடம் நேற்று மனு அளித்தனர்.
புதிய நடைமுறையை மாற்றி, வனத்துறையின் கீழ் நேரடியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.