/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செஞ்சிலுவை சங்க சந்திப்பில் உள்ள ரவுண்டானாவில் மாற்றம்
/
செஞ்சிலுவை சங்க சந்திப்பில் உள்ள ரவுண்டானாவில் மாற்றம்
செஞ்சிலுவை சங்க சந்திப்பில் உள்ள ரவுண்டானாவில் மாற்றம்
செஞ்சிலுவை சங்க சந்திப்பில் உள்ள ரவுண்டானாவில் மாற்றம்
ADDED : செப் 30, 2024 11:47 PM
கோவை : செஞ்சிலுவை சங்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, போக்குவரத்து போலீசார் ரவுண்டானாவில் மாற்றம் செய்துள்ளனர்.
நகர போக்குவரத்து சீரமைப்பு பணியின் தொடர்ச்சியாக, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையொட்டிச் செல்லும், பழைய தபால் அலுவலக சாலை, ஓசூர் சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு வரும் சாலை ஆகியவை சந்திக்கும், செஞ்சிலுவை சங்கம் சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் விதமாக, கோவை மாநகர கமிஷனர் அறிவுரையின் படி, புதிதாக தற்காலிக ரவுண்டானா ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓசூர் சாலை, ஸ்டேட் பேங்க் சாலை மற்றும் பழைய தபால் அலுவலக சாலை வழியாக, நீதிமன்றம் செல்வோர் மேற்படி ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி, நீதிமன்ற வளாகத்திற்கு எளிதில் செல்லலாம்.
ரேஸ்கோர்ஸ் சாலை மற்றும் அரசு கலைக்கல்லுாரி சாலையிலிருந்து, காந்திபுரம் செல்லும் வாகனங்கள், செஞ்சிலுவை சங்க ரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி ஓசூர் ரோடு வழியாக காந்திபுரம் செல்லலாம்.
இந்த ரவுண்டானாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தை, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, தற்காலிக ரவுண்டானாவின் பலன்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பொதுமக்களின் கருத்து அறிந்த பின், இந்த ரவுண்டானாவில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா என்பது குறித்து, ஆலோசனை நடத்தி செயல்படுத்தப்படும்' என்றனர்.