/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்புதல் தேர்வு தேதியில் மாற்றம்
/
திருப்புதல் தேர்வு தேதியில் மாற்றம்
ADDED : ஜன 09, 2025 11:33 PM
பொள்ளாச்சி, ;கோவை மாவட்டத்தில், பிளஸ்1, பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு வரும், 11ம் தேதி நடக்கவிருந்த திருப்புதல் தேர்வு, 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு வரும், 11ம் தேதி முதல் திருப்புதல் தேர்வுஅறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அன்றைய தினம் வார விடுமுறையாக அறிவித்துள்ள நிலையில், வேலை நாளில் மாற்றித்தருமாறு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில், 'மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு வரும், 11ம் தேதி நடக்கவிருந்த திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டு, 13ம் தேதி நடைபெறும்' என, அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கடிதம் அனுப்பியுள்ளார்.