ADDED : ஆக 24, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : வடகோவை - காரமடை இடையேயான தண்டவாளத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றப்பட்டு, கான்கிரீட் சிலாப்கள் மாற்றப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம்(12671) நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், 27 மற்றும் செப். 2ல் கோவை ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில், கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் ரத்து வடகோவை ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே மேம்பாட்டு பணி நடைபெற உள்ளது. அதனால், மேட்டுப்பாளையம் - கோவை(66613) மற்றும் கோவை - மேட்டுப்பாளையம்(66614) மெமு ரயில்கள் நாளை (25ம் தேதி) ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.