ADDED : ஆக 02, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் எலக்ட்ரிக் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி - பாலக்காடு (16843) இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 5 மற்றும், 19ம் தேதிகளில் திருச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு பதில் திருச்சி மலைக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதியம் 1:12 மணிக்கு புறப்படும். இதேபோல், ஈரோடு - திருச்சி(56106) பயணிகள் ரயில், திருச்சி மலைக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும்.

