/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் நேரம் மாற்றம்; பயணியர் போராட்டம்
/
ரயில் நேரம் மாற்றம்; பயணியர் போராட்டம்
ADDED : ஜன 03, 2025 07:25 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி - கோவைக்கு தினமும் காலை, 7:25 மணிக்கு ரயில் கிளம்பி, கோவைக்கு, 8:40 மணிக்கு சென்றடைந்தது. இந்த ரயிலில், வேலைக்கு செல்வோர், கல்லுாரி மாணவர்கள் என பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், புதிய ஆண்டில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு ரயில் பயணியர் எதிர்ப்பு தெரிவித்தனர்.நேற்று ரயில்வே அதிகாரிகளை சந்தித்து, பழைய நேரத்துக்கு ரயில் இயக்க கோரி, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பின், ரயில் முன் நின்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய நேரத்துக்கே ரயிலை இயக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, போராட்டம் நடத்தியவர்கள் மீதுவழக்குப்பதிவு செய்ய உள்ளதாக ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரயில் பயணியர் கூறுகையில், 'பொள்ளாச்சி - கோவைக்கு இயக்கப்படும் ரயிலை பயன்படுத்தி, அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்வோர், கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்தி வந்தோம். காலை, 9:00 மணிக்கு அலுவலகத்துக்கு செல்லும் வகையில், பயனாக இருந்தது.
தற்போது, காலை, 8:00 மணிக்கு கிளம்பி, 9:25 மணிக்கு கோவைக்கு செல்கிறது.
இதனால், அலுவலக பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பழைய நேரப்படி ரயில் இயக்க வேண்டும்,' என்றனர்.