ADDED : ஜன 12, 2024 11:07 PM
ஆனைமலை:அங்கலகுறிச்சி ஊராட்சி, 10வது வார்டு புது காலனி மக்கள், ஆனைமலை குடிமைப்பொருள் தனி தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
புதுக்காலனியில், 1,500 குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறோம். இங்குள்ள ரேஷன் கடையில் கார்டுகள் அதிகமாக இருந்ததால், இரண்டாக பிரித்து, கூட்டுறவு வங்கி கட்டடத்தின் அருகே பொருட்கள் சேமித்து வைத்துள்ள கடையில், அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்குகின்றனர்.
இப்பகுதியில் இருந்து அரை கி.மீ., துாரம் சுற்றி, மெயின் ரோட்டை கடந்து சென்று பொருட்களை வாங்குகிறோம். வயதானோர், அரிசியை தலையில் சுமந்து கொண்டு ரோட்டை கடந்து செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே, எங்கள் குடியிருப்பு பகுதியில் காட்சி பொருளாக இருக்கும் சமுதாய நலக்கூடத்தில் தற்காலிகமாக ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.