/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரமலான் சிறப்பு ரயில் இயக்கத்தில் மாற்றம்
/
ரமலான் சிறப்பு ரயில் இயக்கத்தில் மாற்றம்
ADDED : மார் 27, 2025 11:59 PM
போத்தனூர்: இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான ரம்ஜான் இம்மாதம் 31ம் தேதி வருகிறது. இதனையொட்டி கோவைக்கு, சென்னையிலிருந்து சிறப்பு ரயில் இயக்க போத்தனூர் ரயில் பயணர்கள் சங்கம், கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில், ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையேற்று வரும், 30ம் தேதி இரவு, சென்னையிலிருந்தும், 31ம் தேதி போத்தனூரிலிருந்தும் சிறப்பு ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ரயில் (எண் :06027) சென்னையிலிருந்து இன்று இரவு, 11:50 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுளளது.
இதன்படி அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை சேலம், ஈரோடு திருப்பூர் அடுத்து கோயம்புத்தூர் சந்திப்புக்கு வராமல் இருகூர் மார்க்கத்தில் போத்தனூரை நாளை காலை, 9:00 மணிக்கு வந்தடைகிறது.
மறுமார்க்கமாக, 31ம் தேதி இரவு, 11:30 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்படும் ரயில் (எண்: 06028) மேற்குறிப்பிட்ட ஸ்டேஷன்களின் வழியே சென்னைக்கு மறுநாள் காலை, 8:20 மணிக்கு சென்றடைகிறது.