/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்
/
பராமரிப்பு பணிகளால் ரயில் சேவையில் மாற்றம்
ADDED : மே 24, 2025 05:51 AM
கோவை : போத்தனூர் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வரும் 25 மற்றும் 27ம் தேதிகளில் சில ரயில்சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செகந்தராபாத் - திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் (எண்: 17230), தன்பாத் - ஆழப்புழா எக்ஸ்பிரஸ் (13351), தாம்பரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (16159), பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (22644), திப்ரூகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (22504), ஆகிய ரயில்கள் இருகூர் போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த இரு நாட்களும் கோவையில் நின்று செல்லாது. பதிலாக, போத்தனூரில் நின்று செல்லும்.
ஈரோடு பாலக்காடு ரயில் (66607) ரயில் இந்த இரு நாட்களிலும், சிங்காநல்லூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஸ்டேஷன்களில்
நிற்காது.
இந்த இரு நாட்களிலும் மேட்டுப்பாளையம் - போத்தனூர் ரயில், கோவை வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூர் செல்லாது. மறு மார்க்கத்திலும், கோவையில் இருந்தே புறப்படும்.
இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.